2017 சீசன்: பீட்டர்சன், நெஹியை ரிலீஸ் செய்தது ஐ.பி.எல். அணிகள்!!

10-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் தொடர் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதற்காக அணி நிர்வாகம் வீரர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த வருடம் தாங்கள் வைத்திருந்த வீரர்களை விடுவிக்க, அடுத்த அணியில் இருந்து வீரர்களை மாற்றிக் கொள்ள மற்றும் வீரர்களை தக்கவைக்க கடந்த 15-ந்தேதி (டிசம்பர்) கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தற்போது ஒவ்வொரு அணியும் ரிலீஸ் செய்துள்ள வீரர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி 11 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. அவர்கள் விவரம்:- 1. கெவின் பீட்டர்சன், 2. இசாந்த் சர்மா, 3. இர்பான் பதான், 4. திசாரா பெரேரா, 5. ஆர்.பி. சிங், 6. ஸ்காட் போலந்து, 7. மகேஷ் அஸ்வின், 8. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 9. சவுரப் திவாரி, 10. அல்பி மோர்கல், 11. ஜார்ஜ் பெய்லி.

தக்க வைத்துள்ள வீரர்கள் விவரம்: 1. டோனி, 2. ரகானே. 3. அஸ்வின், 4. ஸ்டீவன் ஸ்மித், 5. டு பிளிசிஸ், 6. மிட்செல் மார்ஷ், 7. அசோக் டிண்டா, 8. அங்குஷ் பெய்ன்ஸ், 9. ராஜட் பாடியா, 10. அங்கித் சர்மா, 11. ஈஸ்வர் பாண்டே, 12. ஆடம் சம்பா, 13. ஜாஸ்கரன் சிங், 14. பாபா அபராஜித், 15. தீபக் சாகர், 16. உஸ்மான் கவாஜா.

குஜராத் லயன்ஸ் அணி 8 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:- 1. டெல் ஸ்டெயின், 2. பராஸ் டோக்ரா, 3. எக்லாவ்யா திவேதி, 4. சரப்ஜித் லட்டா, 5. பிரவீன் தாம்பே, 6. உமாங் ஷர்மா, 7. அமித் மிஸ்ரா (உத்தர பிரதேச வேகப்பந்து வீச்சாளர்), 8. அக்‌ஷ்தீப் நாத்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரிலீஸ் செய்துள்ள 4 வீரர்கள் விவரம்:- 1. மிட்செல் ஜான்சன், 2. ரிஷி தவான், 3. கைல் அபோட், 4. பர்ஹான் பெஹார்டியன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரிலீஸ் செய்துள்ள 9 வீரர்கள் விவரம்:- 1. மோர்னே மோர்கல், 2. பிராட் ஹாக், 3. ஜேசன் ஹோல்டர், 4. கொலின் முன்றோ, 5. ஜான் ஹாஸ்டிங்ஸ், 6. ஜெய்தேவ் உனத்கட், 7. ஆர். சதீஷ், 8. மனன் ஷர்மா, 9. ஷான் டைட்.

மும்பை இந்தியன்ஸ் அணி ரிலீஸ் செய்துள்ள 8 வீரர்கள் விவரம்:- 1. கோரி ஆண்டர்சன், 2. மார்சன்ட் டி லங்கே, 3. உன்முக் சந்த், 4. அக்சேய் வகாரே, 5. நது சிங், 6. கிஷோர் கமாத், 7. மார்ட்டின் கப்தில், 8. ஜெரோம் டெய்லர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரிலீஸ் செய்துள்ள 7 வீரர்கள் விவரம்:- 1. நாதன் கவுல்டர்-நைல், 2. இம்ரான் தாஹிர், 3. ஜோயல் பாரிஸ், 4. பவன் நெஹி, 5. பவன் சுயல், 6. அகில் ஹெர்வாத்கர், 7. மகிபால் லாம்ரோர்.

ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரிலீஸ் செய்துள்ள 10 வீரர்கள் விவரம்:- 1. வருண் ஆரோன், 2. அபு நெசிம், 3. டேவிட் வீஸ், 4. கேன் ரிச்சர்ட்சன், 5. விக்ரம்ஜீத் மாலிக், 6. பிரவீன் டபே, 7. அக்சேய் கார்னேவர், 8. விகாஸ் டோகாஸ், 9. பர்வேஸ் ரசூல், 10. கிறிஸ் ஜோர்டான்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரிலீஸ் செய்துள்ள வீரர்கள் விவரம்:- 1. கரண் சர்மா, 2. ஆஷிஷ் ரெட்டி, 3. மோர்கன், 4. ட்ரென்ட் போல்ட், 5. டி.சுமன், 6. ஆதித்யா டரே.