இந்தியர்களால் வருடம் ஒன்றுக்கு இவ்வளவு இழப்பா?

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுப்படுவதனால் இலங்கை மீன் பிடி தொழிற்துறைக்கு அதிக இழப்பு ஏற்படுவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இந்திய மீனவர்கள் மீன் பிடியில் ஈடுப்படுவதால் வருடம் ஒன்றிற்கு 9,000 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் 6 ஆயிரம் தொன் அளவிலான மீன்களை சட்டவிரோதமாக பிடிக்கின்றனர் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை மீன்பிடி தொழிலுக்கு இந்த செயற்பாடுகள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது சட்டவிரோத மீன்பிடி 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர பாதுகாவலர்களின் உயர் மட்ட பாதுகாப்பு காரணமாகவே சட்டவிரோத மீன்பிடி 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.