அமெரிக்காவில் நிதி மோசடியில் ஈடுப்பட்ட இலங்கையர்! சபாநாயகருக்கு நெருக்கமானவரா?

அமெரிக்காவில் நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கையர், சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அவரின் மருமகன் நவின் திஸாநாயக்கவிற்கும் நெருங்கிய நண்பர் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச முதலீட்டு மோசடி திட்டத்தில் Rienzie எட்வர்ட்ஸ் என்ற இலங்கையர் உட்பட ஆறு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மோசடியில் ஈடுப்பட்ட குறித்த நபர்,இந்திய ஆன்மிக குரு இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில் கரு ஜயசூரிய மற்றும் நவின் திஸாநாயக்க ஆகியோர் புகைப்படங்களிலும் எட்வர்ட்ஸ் காணப்பட்டார்.

மேலும், நுவரெலியா குதிரை பந்தயங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் பல சந்தர்ப்பங்களில் பிரதம விருந்தினராக எட்வர்ட்ஸ் கலந்துக்கொண்டார்.

அமெரிக்கா நீதிபதி ஒருவர் இந்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய முதலீட்டாளர்கள் குறித்து அண்மையில் அறிவித்திருந்தார்.

குறித்த முதலீட்டாளர்கள் ஆறு பேரும், அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளனர் என அமெரிக்கா நீதித் துறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மோசடி 2003 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொருவர் மீதும் பல பண மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையினால் 20 ஆண்டுகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.