ஜெயாவிற்காக விஜய் இப்படி ஒரு முடிவு எடுத்தாரா?

விஜய்யின் பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. அதேபோல் இப்பட பாடல்கள் வரும் டிசம்பர் 23ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஆனால் நிகழ்ச்சியில் நடத்தி பாடல்களை வெளியிட உள்ளார்களா இல்லை நேரடியாக வலைதளத்தில் வெளியிடுகிறார்களா என்று பல கேள்விகள் இருக்கிறது.

இந்நிலையில் இப்பட தயாரிப்பாளர் ஒரு பேட்டியில், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் இழப்பின் காரணமாக பைரவா இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டோம். அதோடு விஜய் அவர்களும் இதே காரணத்திற்காக தான் நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என்று கூறினார்.

அதனால், எளிமையான முறையில் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி பாடல்களை உலகெங்கும் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.