ஜூனியர் உலககோப்பை ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசு!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற 11-வது ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி போட்டியில்  15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மத்திய அரசு பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆக்கி போட்டியில் நாம் முன்னேறி வருகிறோம். ஜூனியர் உலககோப்பை ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறினார்.