அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை!!

எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் அரசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக அரசாங்கத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லை தனியார் அரிசி ஆலைகளுக்கு விற்பனை செய்ய நெல் கொள்வனவு சபை முடிவெடுத்துள்ளது.

நெல் கொள்வனவு சபையிடம் தற்போது 2 இலட்சத்து 9 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

இதிலிருந்து ஒரு பகுதி நெல்லை தனியார் அரிசி ஆலைகளுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் 10 ஆயிரம் மெற்றிக் டொன் இறக்குமதி செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.