ஜெயலலிதா நினைவிடத்தில் சின்னத்திரை கலைஞர்கள் அஞ்சலி!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சின்னத்திரை கலைஞர்கள் இன்று அஞ்சலி செலுத்தினார்கள்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இரவு காலமானார்.

அவரின் உடல் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இந்நிலையில் சின்னத்திரை கலைஞர்கள் இன்று காலை ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக நேற்று ரஜினி ரசிகர்கள் 5,000 பேர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

திடீர் என 5,000 பேர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.