அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த தொலைபேசி அழைப்பின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தெவுன்தர விஷ்ணு தேவாலயத்தின் நிலமே டிஷான் குணசேகர கைது செய்யப்படுவதனை தடுப்பதற்காக தலையிடுமாறு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம், மஹிந்த கோரியுள்ளார்.
இந்த தகவலை ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு கூட்டு எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துளார்.
தொலைபேசி அழைப்பு சம்பவம் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி கடைபிடிக்கும் அமைதி தொடர்பில் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் பல முறை இந்த நிலமே தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இது தொடர்பில் கருத்து வெளியிட வேண்டாம் என தனக்கு மஹிந்த ராஜபக்சவிடம் இருந்த உத்தரவு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நிலமே சிறிது காலம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட்டவர் என்ற போதிலும் ராஜபக்ச ஆட்சி காலத்தில் ராஜபக்சர்களுக்கு நெருக்கமாக செயற்பட்டுள்ளார். அத்துடன் அவர் அந்த குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவராகும்.
எப்படியிருப்பினும் பொலிஸ் மா அதிபர் செயற்பட்ட முறை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கமைய அவரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அழுத்தம் பிரயோக்கிப்படுகின்றது,
இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியலமைப்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.