ஆடை ஏதும் இன்றி விமான நிலையம் வந்த நபரால் பரபரப்பு: வியக்க வைக்கும் காரணம்!

தென்னாப்பிரிக்க நாடான மலாவியில் நபர் ஒருவர் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு விமான நிலையம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த சம்பவம் மலாவி விமான நிலையத்தில் நடந்துள்ளது. Greig Bannatyne என்ற அந்த நபர்தான் வெறும் உள்ளாடையுடன் விமானத்தில் பயணம் செய்யும் பொருட்டு விமான நிலையம் வந்தவர்.

தொண்டு நிறுவனங்கள் சார்பில் மலாவி ஏரியில் நீச்சல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த போட்டியில் கலந்துகொள்ளும் பொருட்டு கிரேக் மலாவி வந்துள்ளார்.

விமானம் நிலையம் செல்ல குறித்த காலத்தில் பேருந்து வந்ததை அடுத்து இவருடன் கலந்துகொள்ளும் நீச்சல் வீரர்கள் உடனடியாக பேருந்தில் ஏறிக்கொண்டனர். ஆனால் இவருக்கு மாற்று உடை எடுத்து அணிந்துகொள்ளும் சாவகாசம் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார். இதனையடுத்து நீச்சலுக்கான ஆடையுடனே விமான நிலையம் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

4 மணி நேரம் தொடர்ந்து பேருந்து பயணம் செய்து விமான நிலையம் வந்து சேர்ந்த குழுவினரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் போட்டி எனவும், விமானத்திற்கு தாமதமானதால் மட்டுமே கிரேக் உள்ளாடை மட்டுமே அணிந்து வர நேரிட்டது என விளக்கம் அளித்த பின்னரே அவரை உள்ளே அனுமதித்துள்ளனர்.

மட்டுமின்றி கடவுச்சீட்டு சரிபார்க்கும் அதிகாரிகள் இவரது விளக்கத்தை கேட்டு விமானத்தில் பயணிக்க அனுமதித்தாலும், விமானத்தில் செல்லும் முன்பு உரிய உடை அணிந்து செல்ல வெண்டும் என்று கண்டிப்புடன் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்த களேபரங்களுக்கிடையே தொண்டு நிறுவனம் சார்பில் கிரேக் அணி 2000 பவுண்டு தொகையை சேகரித்துள்ளனர்.