கொழுப்பை குறைக்கும் இஞ்சி – தேன் டீ!

தேவையான பொருட்கள் :

டீத்தூள் – 1 ஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
இஞ்சி – சிறிய துண்டு
புதினா இலை – சிறிதளவு
தேன் – தேவைக்கு
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை :

* இஞ்சியை ஒன்றும் பாதியாக தட்டிவைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, பட்டையை போட்டு கொதிக்கவிட வேண்டும்.

* நன்றாக கொதிக்க பின் அதில் இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

* அடுத்து டீ இலைகளை சேர்த்து கொதிக்க விடவும்.

* அடுப்பை அணைத்தவுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, சிறிது நேரம் மூடி வைத்து, தெளிந்ததும் வடிகட்டி பருகவும்.

* சுவையான இஞ்சி தேன் டீ தயார்.