இங்கிலாந்தில் 3 பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கீகாரம்!

பிறக்கும் சில குழந்தைகள் மரபணு குறைபாடுகளுடன் மைட்டோகாண்டிரியல் என்ற நோயுடன் பிறக்கின்றன. அதனால் பலவித நோய்களுக்கு ஆளாகின்றன. அதை தவிர்க்க மற்றொரு பெண்ணின் கருமுட்டையில் உள்ள டி.என்.ஏ. கருவில் வளரும் குழந்தைக்கு கூடுதலாக செலுத்தப்படுகிறது.

இது ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழிவகுக்கிறது. இதன் மூலம் 2 பெண்கள், ஒரு ஆண் என 3 பேர் அக்குழந்தைக்கு பெற்றோர் ஆகிறார்கள்.

எனவே, இத்தகைய குழந்தையை உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து டாக்டர்கள் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு முதல்முறையாக 3 பெற்றோர் மூலம் உருவாகும் குழந்தைகள் அடுத்த ஆண்டு பிறக்க உள்ளன.

அத்தகைய குழந்தைகளுக்கு இங்கிலாந்து அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. ‘மைட்ரோ காண்டிரியா’ என்ற மரபணு நோயை தடுக்க எடுக்கும் முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கருவூட்டல் முறைப்படுத்தும் சட்டத்தை வரைமுறைப் படுத்தியுள்ளனர்.