முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரும், அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான ஜாலிய விக்ரமசூரியவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாலிய அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றிய காலத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.
இதனடிப்படையில் இவர் நிதி மோசடி விசாரணை பிரிவினால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







