நாட்டில் காட்டாட்சி தலைதூக்கி உள்ளது! ஆபத்து என எச்சரிக்கிறார் மகிந்த!

மன்னார் முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடற்படை சிப்பாய்கள் இருவர் சிறைப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவத்தின் போது படையினரை அனுப்பி நடவடிக்கை எடுக்காத அரசாங்கம், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தமது உரிமைக்காக குரல்கொடுத்த தொழிலாளர்களை கலைக்க கடற்படையினரை பயன்படுத்தியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ தேசிய அரசாங்கத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளால் நாடு ஆபத்தை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

கொழும்பு பத்தரமுல்லை பிரதேசத்திலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்ட நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேசிய அரசாங்கத்தின் மீது இந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கின்றார்.

கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்@ராட்சி சபைகளின் உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் முன்னாள் தலைவர்கள் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பத்தரமுல்லை நெலும்பொக் கன மாவத்தையிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது உரையாற்றிய மகிந்தராஜபக்ஷ, தற்போதைய ஆட்சியில் நாட்டில் சட்டத்தின் ஆட்சி முழுமையாக சீர்குலைக்கப்பட்டு காட்டாட்சி தலைதூக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாடு எங்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதை விழித்திருந்து அவதானித்துக் கொண்டிருக்கவேண்டிய ஒரு யுகம் உருவாகி இருக்கின்றது. தற்போது நாடு மிகவும் நெருக்கடியான நிலையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. பொலிஸ் ஆட்சியினை நடைமுறைப்படுத்தி அனைவரையும் கட்டுப்படுத்தும் யுகமெனக் கூறினால் அதில் பிழையில்லை என்று நினைக்கின்றேன்.

ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர். தேர் தலை ஒத்திவைக்கின்றனர். ஊழல் நடைபெற்றதாக எங்கள் மீது குற்றம்சாட்டிக் கொண்டு அவர்கள் ஊழலில் ஈடுபடுகின்றனர். பொருளாதாரம் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. வேலையில்லா பிரச்சினை அதிகரித்துள்ளது. பணியில் உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்புகின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளை இல்லாமல் செய்கின்றனர். துறைமுக ஊழியர்களின் பிரச்சினையும் அவ்வாறுதான் என்றார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது கடற்படையினரைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்ட மகிந்த ராஜபக்ஷ அவசரகால சட்டம் இல்லா நிலையில் எவ்வாறு கடற்படையினரை அனுப்பினார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், போராட்டம் ஒன்றைகலைக்க கடற்படையை அனுப்பிய முதல் சந்தர்ப்பம் இதுவே. இதற்கு முன்னர் இவ்வாறான நிலைமைகளில் பொலிஸாரே சென்றனர். ஒரு புறம் நீதிமன்ற ஆணையை பெற்றுக்கொண்டு மறுபுறம் கடற்படையை களமிறக்குகின்றனர். தற்போது யுத்தம் இல்லை, அச்சுறுத்தல் இல்லை ஆகவே இராணுவ முகாம்களை அகற்றுவதாக தெரிவிக்கின்றனர்.

எனினும் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கின்றது? பொலிஸார் மீது தாக்குதல் நடத்தும்போது, கடற்படையைச் சேர்ந்த இருவரை தடுத்து வைத்திருந்தபோது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. வடக் கில் நடந்த சம்பவங்கள் உங்களுக்குத் தெரியும். அந்த சந்தர்ப்பங்களில் கடற்படையை அரசாங்கம் அனுப்பவில்லை. ஆனால் தென்பகுதியில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும் போது குறித்த போராட்டத்தை ஒடுக்க கடற்படையினரை அனுப்பிவைக்கின்றனர்.

கடற்படையை அங்கு அனுப்பியது யார்?. நாட்டில் தற்போது அவசரகால சட்டம் இல்லை. ஆகவே ஜனாதிபதியின் அனுமதியில்லாமல் கடற்படையை அங்கு அனுப்ப முடியாது. எனினும் அதனையும் மீறி அரசாங்கம் அம்பாந் தோட்டை துறைமுகத்திற்கு கடற்படையினரை அனுப்பி தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்கியுள்ளது எனச் சாடினார்.

நாட்டின் சொத்துக்களை தனியாருக்கும், வெளிநாடுகளுக்கும் விற்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அரசாங்கம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீன நிறுவனமொன்றுக்கு வழங்கவுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ஷ மேலும் குற்றம்சாட்டினார்.

நாட்டின் துறைமுகத்தை மட்டுமல்லாது காணிகளையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையை சீனாவுக்கு கொடு ப்பதற்கு தீர்மானித்துள்ள இவர்கள் திரு கோணமலை அல்லது காங்கேசன்துறையை யாருக்கு கொடுப்பார்களோ எனத் தெரியவில்லை எனவும் மகிந்த ராஜபக்ஷ தனது உரையில் குறிப்பிட்டார்.