கோலியை சச்சினுடன் ஒப்பிடுவது தேவையில்லாதது: ஜாஃப்ரி பாய்காட்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2016-ம் ஆண்டு அவருக்கு பொற்காலம் என்றே கூறலாம். ஒரு வருடத்தில் மூன்று இரட்டை சதம், 16 டெஸ்டில் 1200 ரன்களுக்குமேல் குவிப்பு, சராசரி 80-ற்கு மேல், ஒரே தொடரில் 600 ரன்களுக்கு மேல் என சாதனைமேல் சாதனைப் படைத்து வருகிறார்.

இதனால் விராட் கோலியை கவாஸ்கர் மற்றும் சச்சின் தெண்டுல்கர் ஆகியோருடன் ஒப்பிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் சச்சின் தெண்டுல்கருடன் ஒப்பிடக் கூடாது என்று முன்னாள் இங்கிலாந்து வீரரும், தலைசிறந்த தொலைக்காட்சி வர்ணனையாளரும் ஆன ஜெஃப்ரி பாய்காட் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நாம் அனைவரும் மனிதர்கள். நாம் வீடியோவில் என்ன பார்க்கிறமோ, அதைவிட சிறந்தது ஒன்றுமில்லை என்று நினைபோம். கவாஸ்கரை விட கோலி சிறந்தவரா? பொறுத்திருந்து பார்ப்போம். விராட் கோலி சிறந்த வீரராக வளர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், கவாஸ்கர் மற்றும் சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் ஏற்கனவே சிறந்த வீரர்கள்.

ராஜா நீண்ட நாள் வாழ்வார். ராஜ் இறந்து போய் விட்டார். இவரா தெண்டுல்கர், இவரா சிறந்த முறையில் விளையாடி 100 சதங்கள் அடித்தார்? கோலியை விட இவர் சிறந்தவரா? என்று பேசுவது எளிதானது. இது எல்லோருக்கும் நடப்பதுதான். நாம் எதை பார்க்கிறமோ அதன்மீதுதான் கவனம் செலுத்துகிறோம். ஏனென்றால் நாம் எல்லோரும் மனிதர்கள்.

அவர் எல்லா சாதனைகளையும் உடைக்கப்போவதில்லை. அப்படி உடைத்தாலும் இது பெரிய விஷயமாக இருக்காது. இது அவரை முன்னாள் வீரர்களை விட சிறந்த வீரராக உருவாக்காது. நான் டெல்லியில் கோரி சோபர்சை விட அதிக ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளேன்.

இந்த ரன் என்னை அவரை விட பெரிய பேட்ஸ்மேனாக உருவாக்கவில்லை. இந்திய அணிக்காக விராட் கோலி செய்தது என்ன? என்பதை, அவர் ஓய்வு பெறும் காலத்தில் வைத்து சிறந்த வீரரா என்பதை தீர்மானிக்க வேண்டும். நான் சதம் அடிக்கும்போது இங்கிலாந்து ஒருமுறை கூட தோல்வியடைந்தது கிடையாது. அவர்கள் என்னை இரண்டு முறை எளிதாக அவுட்டாக்க முடியவில்லை. அதனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இதைச் சொல்ல பெருமையடைகிறேன்’’ என்றார்.