அமெரிக்காவின் தீர்மானத்தினால் இலங்கைக்கு பாரிய பாதிப்பு!

அமெரிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளும் பொருளாதார ரீதியிலான தீர்மானம் காரணமாக இலங்கைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றியவர்,

நேற்று அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் நாட்டில் வைப்பு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு நிதி பாரிய அளவில் அமெரிக்காவுக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது.

இதேபோல் அமெரிக்காவின் திறைச்சேரி கணக்குகள் அதிகரிக்கப்பட்டமையினால் கடந்த ஆண்டில் 2400 மில்லியன் டொலர் இலங்கைக்கு வெளியே சென்றது.

இதனால் பாரிய அளவில் ரூபாய் வீழ்ச்சியடைவதற்கு காரணமாகியது. அதேபோன்று எண்ணெய் விலை, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 45 டொலர் என குறைந்த அளவில் இருந்து 57 டொலராக அதிகரித்துள்ளது.

எண்ணெயை குறைப்பதற்கு ஒபெக் அமைப்பு தீர்மானித்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு விடயங்களும் ரூபாய் வீழ்ச்சியடைவதற்கு தாக்கம் செலுத்துகின்றது.

இலங்கைக்கு மோசமான பொருளாதார காலம் ஒன்று எதிர்வரும் காலங்களில் வரவுள்ளன. எனவே அந்த சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சிற்கும், ஏனைய அமைச்சிற்கும் பொறுப்புடன் செயற்பட நேரிடும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.