அழகாக ஆசைப்படுபவர்களா நீங்கள்? அப்போ இது மட்டும் தான் சிறந்த தீர்வு!

வீட்டில் நாம் அன்றாடம் பல செயற்கை திரவியங்களை பயன்படுத்துகிறோம். நம் வீட்டில் இரசாயனங்களால் ஆக்கப்பட்ட எத்தனை பொருட்கள் இருக்கின்றன என நீங்களே பட்டியலிட்டு பாருங்கள்.

குறிப்பாக அழகு சாதனப்பொருட்கள், குளியலறையில் பயன்படுத்தும் பொருட்கள் (ஷாம்பு, துவைத்த துணியை மணமாக்க கம்போர்ட், நெப்தலின் உருண்டைகள்……) மற்றும் அறைகளை நறுமணம் மிக்கதாக வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் வாசனைத்தெளிப்பான் (room spray) போன்றவை ஒரு நாள் இல்லாவிடில் என்ன செய்வீர்கள்? அன்றைய நாள் முழுதும் வேலைகள் செய்வது அசௌகரியமாக இருக்கும்.

ஆனால் இந்த பொருட்கள் அன்றாட வேலைகளை இலகுவாக்கினாலும் கூட எவ்வளவு பெரிய பிரச்சினைகளை எதிர்காலத்தில் உண்டாக்கும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? தெரிவதற்கு வாய்ப்பே இல்லை.

மாறாக இவை இல்லாவிடில் வீட்டை சுத்தமாக வைத்திருக்க முடியாது, நம்மை அழகுபடுத்திக்கொள்ள முடியாது என அடுக்கடுக்காக சான்றிதழ் வழங்குவீர்கள்.

முதலில் அழகு சாதன பொருட்கள் பற்றிபார்ப்போம்…..

கண்களை அழகுபடுத்தும் பொருட்கள் : கண்கள் என்பது எமது மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆனால் கண்ணிற்கு நாம் பயன்படுத்தும் பல்வேறு அழகு பொருட்களால் கண்ணில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கண்ணிற்கு பயன்படுத்தும் ஐஷடே பாரிய உடல்நலப்பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதில் உடலுக்கு ஒவ்வாத 26 விதமான இரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றில் மிகவும் பாரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக பாலிதீன் டெரிப்தாலேட் எனப்படுகின்ற இரசாயனம் கருதப்படுகிறது.

இந்த இரசாயனப்பொருட்கள் புற்று நோய் மற்றும் உடலின் உட்பாகங்களில் கடுமையான பாதிப்பு என்பவற்றை தோற்றுவிப்பதாகவும் மருத்துவ ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.