புதிய பெயருடன் களமிறங்க தயாராகின்றது கூகுளின் தானியங்கி கார்!

முற்றுமுழுதாக தானாகவே இயங்கக்கூடிய கார்களை வடிவமைக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.

இதில் கூகுள் நிறுவனமும் காலடி பதித்துள்ளமை தெரிந்ததே.

X Labs எனும் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இக் கார் வடிவமைப்பானது பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் Waymo எனும் பெயர் மாற்றத்துடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Waymo நிறுவனமாது கடந்த அக்டோபர் மாதம் தமது தானிங்கி கார்களை முழுமையாக வடிவமைத்து முடித்திருந்தது.

அக் கார்கள் சோதனை ஓட்டத்தில் இருக்கும் நிலையில் அந்த நிறுவனத்துடன் கூகுள் கைகோர்த்துள்ளது.

இதன் காரணமாகவே கூகுளின் தானியங்கி காருக்கு அந் நிறுவனத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த 8 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தானியங்கி கார் முயற்சியானது சாரதிகளின் களைப்பு, போதை, கவனச் சிறதல்கள் என்பனவற்றினால் ஏற்படும் விபத்துக்களை தகவிர்ப்பதை நோக்காகக் கொண்டது.