உங்கள் சருமம் மிளிர அழகு சாதன பொருட்கள் தேவையில்லை. வாழைப்பழத் தோலே போதுமானது..

வாழைப்பழைம் சாப்பிட்டவுடன் அதன் தோலை வீசாதிங்க. அதை கொண்டு உங்கள் அழகை மேம்படுத்தி கொள்ளுங்கள்

உங்கள் அழகை அதிகப்படுத்த வாழைப் பழ தோலை உபயோக படுத்துங்கள். மாற்றத்தை விரைவில் உணர்வீர்கள்

இயற்கையான ப்ளீச்சிங்

ஒரு வாழைப் பழ தோல் மற்றும் 2 ஸ்பூன் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அவ்ற்றுடன் சிறிது சர்க்கரை கலந்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிது பால கல்ந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். இதனுடையை ப்ளீச்சிங் குணம் சருமத்திலுள்ள அழுக்கு, செல்களை அகற்றி நிறத்தை தரும்.

சரும டோனர்

வாழைப்பழத் தோலை முகத்தில் தேயுங்கள். தோல் நிறம் பிரவுனாக மாறும் வரை தேய்க்கலாம். பின்னர் 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். சருமம் பளபளக்கும்.

வறட்சி சுருக்கம் போக்க

பாலாடையுடன் வாழைப் பழத்தோலை கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் போடுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவவும். வறட்சி போய் மிருதுவாகும். சுருக்கங்களும் மறையும். வாரம் இருமுறை செய்யலாம்.

எண்ணெய் சருமத்திற்கு

வாழை பழத் தோலை மசித்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிட கழித்து முகம் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு முகத்தில் இருக்காது.

கருவளையம் மறைய

வாழைப் பழ தோலிலுள்ள நாரை எடுத்து அதனுடன் கற்றாழையின் ஜெல்லை கலந்து நன்றாக மசித்துக் கொள்லுங்கள். இதனை கண்களுக்கு அடியில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாரு செய்தால் கருவளையம் மறைந்துவிடும்.

இதற்கு பிறகு வாழைப்பழம் சாபிட்டால் தோலை குப்பை தொட்டியில் போடாதீர்கள். அதை வைத்து உங்கள் அழகை மெருகு ஊட்டலாம்.