வேகமாக மாறிவரும் உலகில் நாட்டின் பாதுகாப்பு துறைக்கு தேவையான நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த, மாகொல, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு துறையினருக்கு வழங்கவேண்டிய வளங்களை வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் நாட்டின் பிரஜை என்ற வகையிலும் தாய் நாட்டின் பாதுகாப்புக்காக பாடுபட்டுவருகின்றேன்.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பாதுகாப்பு துறை தொடர்பான பரந்த அறிவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துவரும் பாதுகாப்பு கல்லூரிக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, அதன் மூலம் நாட்டின் எதிர்கால பாதுகாப்பு தொடர்பில் திருப்தியடையக்கூடிய நிலை ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் முயற்சியெடுத்ததாகவும், பாதுகாப்பு படையினருக்கு எதிராக சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கும் அதனால் உள்நாட்டில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கும் அந்த முயற்சிகள்உறுதுணையாக இருந்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.