குளிக்காலத்தில் குழந்தைகளுக்கு அவசியமாக செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

இப்போதெல்லாம் வானிலை எப்போது மாறுகிறது என்றே தெரியவில்லை. திடீரென்று வெயில், மழை, இதில் மிகவும் பாதிக்கப்படுவது குழந்தைகள்.

தற்போது குளிர்காலமாக இருக்கிறது. இந்த நேரத்தில் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு தொற்று நோய்கள் எளிதில் தாக்கும்.

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம்.

குளிர் காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. ஆனாலும், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும், தொண்டை வறண்டு போகாமல் பாத்துக்கொள்ள வேண்டும். வெந்நீர் அருந்துவது மிகவும் சிறந்தது.

Fridgeல் வைத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

உதடு வெடிப்பை தவிர்க்க நெய் அல்லது எண்ணெய்யை உதட்டில் பூசு வேண்டும். காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.