விடாப்பிடியாக இருந்து வெற்றிப்பெற்ற ஐஸ்வர்யா தனுஷ்!

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ். இவர் 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கினார்.

தற்போது சினிமா வீரன் என ஒரு டாக்குமெண்ட்ரியை எடுத்து வருகிறார். இவர் சமீபத்தில் ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது தரவேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன் வைத்தார்.

இந்த கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்றியுள்ளது, இனி எல்லா வருடமும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது அளிக்கப்படுமாம்.