நயன்தாராவை ஓரம்கட்டும் காஜல் அகர்வால்?

இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய்61′  படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க மும்முரமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் நயன்தாரா பிசியாக இருப்பதால் படக்குழுவினர் கேட்கும் கால்ஷீட் அவரிடம் இருந்து கிடைக்குமா? என்பது சந்தேகம்தானாம். எனவே தற்போது படக்குழுவினர்களின் பார்வை காஜல் அகர்வால் பக்கம் சென்றுள்ளது

ஏற்கனவே விஜய்-காஜல் அகர்வால் நடித்த ‘துப்பாக்கி’ மற்றும் ‘ஜில்லா’ சூப்பர் ஹிட் என்பதால் அந்த வெற்றி ஜோடியை மீண்டும் திரையில் இணைக்க முயற்சி நடக்கின்றதாம். தற்போது ‘தல 57’ படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலிடம் இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்த பேச்சுவார்த்தையை தயாரிப்பு தரப்பு தொடங்கவுள்ளதாம்