பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா! ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு

பிரான்ஸ் பிரதமர் மானுவேல் வால்ஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பிரான்சில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது, இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான பிராங்கோய்ஸ் ஹோலண்டே போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.

எனவே சோஷலிசக் கட்சி சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளார் மானுவேல் வால்ஸ், இதற்காக பிரதமர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

கடந்த தேர்தலில் போட்டியிடும் வெறும் 5.6 சதவீத வாக்குகளே பெற்றார், ஆனால் தற்போது பிரதமராக இருந்து தனது நிர்வாக திறமையை காட்டியுள்ளதால் மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறார்.

இவரது ராஜினாமாவை தொடர்ந்து உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த பெர்னார்டு காஸனூவ் புதிய பிரதமராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.