ஜெயலலிதா உடலை 3 முறை வலம் வந்த ‘கருடன்’- பெருமாள் நேரில் ஆசிர்வதித்ததாக உருக்கம்

நவகிரகங்களில் 5ம் எண் அனைவருக்கும் பொருந்தும் எண்ணாக அமையும். பேச்சு வழக்கில் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அதற்கேற்ற பலனை தருபவர் புதன். அவருடைய எண் 5 ஆகும். புதன் அதிபதி, பெருமாளின் தீவிர பக்தன் என்பது சாஸ்திரத்தில் கூறப்படுவது.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மாரடைப்பால் காலமானார். அன்றைய தேதி 5ஆக அமைந்தது. இதனால், புதனின் அருள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உள்ளது என கூறப்படுகிறது.

இதையொட்டி, ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அப்போது, பெருமாளின் வாகனமான கருடன் 3 முறை ராஜாஜி அரங்கை வலம்வந்தது,

இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள், பெருமாளின் ஆசிர்வாதம் ஜெயலலிதாவுக்கு கிடைத்ததாக உருக்கமாக கூறினார்கள்.