இலங்கையில் உள்நாட்டுப் போர் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டு 7 வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தம் விட்டுச் சென்ற பாதிப்பில் இருந்து வடக்கு இன்னும் முழுமையாக மீளவில்லை என சிறகுகளை விரிக்கும் புளு மெக்பி பவுண்டேஷன் ஸ்தாபகர்களில் ஒருவரான கிசான் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
புளு மெக்பி பவுண்டேஷன் ஆற்றவுள்ள பணிகள் தொடர்பில் விவரிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்
வடக்கில் போரில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கானவர்களின் குடும்பங்கள், கணவனைஇழந்த குடும்பங்கள், அங்கவீனமானவர்களை கொண்ட குடும்பங்கள் என இப்பட்டியல்நீண்டு கொண்டே போகிறது.
யுத்தத்தினால் சிதைக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் அனாதரவாக சொந்த வீட்டை இழந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் தகரக் குடில்களிலும் வெயிலிலும் மழையிலும் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் வாழ்வை மேம்படுத்த அவர்களுக்கான பொருளாதார ஸ்திரத்தன்மையினைகட்டியெழுப்பி அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை வளப்படுத்ததொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தவும் அதற்குரிய பயிற்சிகளையும் அறிவையும்புகட்டுவது எமது மக்களுக்கான இன்றியமையாத தேவையாகும்.
இத்தகையதொரு பணியினை இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டியங்கும் புளு மெக்பை பவுண்டேஷன் வடக்கில் செயல்படுத்த தொடங்கியுள்ளது,
இந்த வருடத்தின் நடுப்பகுதியில் சேவையாற்றத் தொடங்கியுள்ள இந் நிறுவனமானதுஉலகில் யுத்த நெருக்கடிக்குள் பாதிக்கப்பட்டவர்களை மேம்படுத்தி அவர்களைமுன்னேற்றமடையச் செய்து நிலையான நீடித்த தீர்வுகளை உருவாக்கி சமூகத்துடன்மீண்டும் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதனடிப்படையில், முதல்கட்டமாக மட்டுவில் கிழக்கில் யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான மற்றும் இடம்பெயர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் 5 வயது முதல் 17 வயது வரையுள்ள 35 பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான அடிப்படை ஆங்கில வகுப்புகளை வில்சன் சனசமூக வாசிகசாலை கட்டடத்தில் முன்னெடுத்து வருகிறது.
அதேபோன்று யாழ்ப்பாணப் பிரதேசத்துக்கு உட்பட்ட யுத்தத்தால் அங்கவீனமான 20 வயது முதல் 35 வயதுவரை உள்ள 10 பேரை தெரிவுசெய்து அவர்களுக்கான ஆங்கில கல்வி மற்றும் கணணி கல்வி வகுப்புகளை ஜெய்பூர் நிறுவனத்தின் கட்டடத்தில் நடாத்தி வருகிறது.
இக்கற்பித்தலைத் தொடர்ந்து இவர்களுக்கான தொழில்வாய்பினை உரியமுறையில் பெற்றுக் கொடுப்பதோடு அவர்களுக்கான பொருளாதார ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்தி; தங்களின் தேவைகளை தாங்களாகவே பூர்த்தி செய்வதன் மூலம் வளமான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் 3 வருடங்களுக்கு தொடர்ந்து இந்நிகழ்ச்சித் திட்டத்தைசெயல்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிசான் ஆனந்தன் லண்டன் கிங்ஸ் பல்கலைக் கழகத்தில் கணணி இளங்கலைபட்டப்படிப்பும் ஆங்கில கற்கையில் சிறப்புத் தேர்ச்சியும் பெற்றவர்.
கடந்த 7 வருடங்களாக லண்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பல முன்னனி நிதி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். தற்போது இலங்கையில் புளு மெக்பை பவுண்டேஷன் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
ஆங்கிலப் புலமையுடன் கூடிய கணணி கல்வியை பயிற்றுவிப்பதன் மூலம் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கான இணையதள வடிவமைப்பு மற்றும் இணையம் தொடர்பான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர இயலும் என்கிறார் நிறுவனத்தின் இணை ஸ்தாபகரான திவ்யா ஆனந்தன்.
திவ்யா ஆனந்தன் லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் உளவியல் இளகலைப்பட்டப்படிப்பை முடித்துள்ளார். அத்துடன் அறிவியல் சஞ்சிகை ஒன்றிலும் பணியாற்றிவருகிறார்.
இவ்விளம் தம்பதியினர் வடக்கில் சேவையாற்றுவதன் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவிளைவதாகவும் எதிர்வரும் 3 வருடங்களுக்கு தொடர்ந்து இந்நிகழ்ச்சித் திட்டத்தைதங்கள் நிறுவனம் செயல்படுத்தவுள்ளதால் அதற்கான ஒத்துழைப்பை அனைவரிடமும்இருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.







