கமல் இப்படி பண்ணிட்டாரே! சர்ச்சையை கிளப்பிய இரங்கல் செய்தி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டில் “சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் பெயரையும் குறிப்பிடாமலேயே இதை அவர் டிவிட் செய்துள்ளதால் சிலர் கமல் செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவ்வாரன வேலை கமல்ஹாஸன் நேரில் அஞ்சலி செலுத்தாத நிலையில் ட்விட்டரில் இவ்வாறு தெரிவித்துள்ளமையினாலே பலர் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.