அமரர் ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

முன்னாள் தமிழக முதல்வர் அமரர் செல்வி ஜெயலலிதா மறைவிற்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் ‘தமிழ்நாடு மட்டுமல்ல….இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்.