ஜெயலலிதாவின் உடல்நிலை கை மீறிவிட்டது!

ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக லண்டன் மருத்துவர் ரிச்சர் பீலே தெரிவித்துள்ளார்.

இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க்ப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரின் உடல் நிலை குறித்து பெரும் பதற்றத்தில் அங்குள்ளவர்கள் இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாரடைப்பினால் அதிதீவிரி சிகிச்சைப் பிரிவில் அனுமதிகப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இவரின் உடல் நிலை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர் பீலே கருத்து வெளியிடுகையில்,

முதலமைச்சருக்கு தேவையான எல்லா சிகிச்சைகளும் செய்தாகிவிட்டது. ஆனால் அவரின் உடல் நிலை மிகமிக மோசமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மக்களிடத்தில் பெரும் சோகத்தை அச்செய்தி ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இவரின் உடல் நிலை தற்போது இறைவனின் கையில் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.