ஐந்தே நிமிடங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா?

பெரும்பாலான இந்திய மக்கள் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் உயர் இரத்த அழுத்தம். இது மிகவும் ஆபத்தான ஒன்று. உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் தூக்கமின்மை, அதிகப்படியான மன அழுத்தம், உடல் பருமன், புகைப்பிடிப்பது, அளவுக்கு அதிகமாக மது அருந்துவது மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இதற்கு போதிய சிகிச்சைகளை மேற்கொள்ளாவிட்டால், உயிரையே விடக்கூடும். ஏனெனில் உயர் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்களுக்கு, இதய நோய் எளிதில் வரக்கூடிய வாய்ப்புள்ளது. குறிப்பாக மாரடைப்பு, இரத்த குழாய் சிதைவு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால், அதனை ஐந்தே நிமிடங்களில் குறைப்பதற்கு ஒரு அருமையான பழங்கால் சைனீஸ் மசாஜ் உள்ளது. அந்த சைனீஸ் மசாஜை செய்து வந்தால், உடனே குறைத்துவிடலாம். சரி, இப்போது அது என்னவென்று பார்ப்போமா!!!

உயர் இரத்த அழுத்தத்தின் போது என்ன நடக்கும்?

உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் போது, தசைகள் அதிகமாக டென்சனாகி, இரத்த நாளங்கள் சுருங்கி, அழுத்தம் அதிகரிக்கும். மேலும் இரத்தம் தமனிகளின் சுவர்களை வேகமாக தாக்கும் மற்றும் இதயம் இரத்தத்தை வேகமாக தள்ளும் போது தமனிகள் மெலிவதோடு, இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

பழங்கால சைனீஸ் மருத்துவம்

எனவே இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கு மாஸ்கோ கால்பந்து கிளப்பின் மருத்துவரான லு, ஹுன் சென், பழங்கால சைனீஸ் மருத்துவம் ஒன்றை பரிந்துரைக்கிறார். மேலும் இந்த மருத்துவத்தைப் பின்பற்றினால், விரைவில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாமாம்.

முதல் முறை
face1
இரத்த அழுத்தம் உயரும் போது, படத்தில் காட்டியவாறு காது மடலின் பின்புறத்தில் விரலைக் கொண்டு மேலும் கீழுமாக மென்மையாக மசாஜ் அல்லது அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு பக்கம் 10 முறையும், மற்றொரு பக்கம் 10 முறையும் செய்ய வேண்டும்.

இரண்டாம் முறை
4-face
இந்த முறைப்படி, படத்தில் காட்டியவாறு காதிற்கு 1/2 இன்ச் முன்பு விரலை வைத்து, மூக்கின் நுனி வரை மென்மையாக தழுவ வேண்டும். இப்படி இரண்டு பக்கமும் செய்ய வேண்டும். இதனாலும் இரத்த அழுத்தம் சீராகும்.

குறிப்பு

சைனீஸ் மருத்துவத்தின் படி, ஓர் குறிப்பிட்ட பகுதியில் அழுத்தம் கொடுப்பதால், உடலில் இரத்த ஓட்டம் சீராவதோடு, இரத்த அழுத்தமும் சீராகி, விரைவில் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.