நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்படும் முக்கிய பிரமுகர்களுடன் தொடர்புகளை பேணி வருவதாக கூறப்படும் மருத்துவர் குறித்து சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பாக தமக்கு அறிக்கை ஒன்று கிடைத்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலை மருத்துவமனை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமானது. அதற்கான மருத்துவர்களை சுகாதார அமைச்சு வழங்கி வருகிறது.
சிறைச்சாலை மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவர் சிறையில் அடைக்கப்படும் முக்கிய பிரமுகர்களுடன் தொடர்புகளை பேணி வருகிறார்.
அவர்களை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். எனக்கு அறிக்கை கிடைத்துள்ளது. விசாரணைகளின் பின்னர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.