மைத்திரியின் அலுவலகத்தை உடைத்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள்! கொழும்பு ஊடகம் தகவல்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை அழிப்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்கள் வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்காக மாத்தறை சிறைச்சாலையின் 15 புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை அழிப்பதற்கு செயற்பட்ட சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழு அன்றைய தினம் இரவு நேரத்தில் மஹிந்தவின் பிரச்சார போஸ்டர் ஒட்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கைகளுக்காக புலனாய்வு பிரிவு அதிகாரிகளை சிறைசாலை அத்தியட்சகரினாலே ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மாத்தறை சிறைச்சாலையின் பிரதான சிறைக் காவலராக செயற்பட்ட நபர் அந்த சிறைச்சாலையில், சிறை அத்தியட்சகர் பதவிக்கு முன்னாள் சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் உயர்த்தப்பட்டுள்ளார். அந்த பதவி உயர்வும் மோசடியான முறையிலேயே வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலை அத்தியட்சகருக்கு எதிராக ஊழல் மோசடி மற்றும் முறைக்கேடு தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2014.12.14ஆம் திகதி அக்குரஸ்ஸ நகரத்தில் மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக மேடை நிர்மாணித்தல் உட்பட நடவடிக்கைகளுக்கு 25 சிறைக்கைதிகள் மற்றும் 4 அதிகாரிகளை ஈடுபடுத்தல், ஜனாதிபதி தேர்தலின் போது மாத்தறை சிறைச்சாலை சாரதி, காவலாளிகள் மற்றும் ஊழியர்கள் குறித்த அமைச்சருடன் தேர்தலில் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தல், 9810 என்ற இலக்கத்திலான பொலேரோ ஜுப் வண்டி மற்றும் லலித் குரே உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை அழிப்பதற்காகவும், மஹிந்த ராஜபக்சவின் போஸ்டர் ஒட்டுதல், பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தல், குறித்த ஜுப் வண்டிக்காக மாத்தறை சிறைச்சாலையில் 4950 ரூபாய்க்கு எரிபொருள் வழங்குதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.