டெவன் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றவர் பரிதாப பலி!

தலவாக்கலை, டெவன் நீர்வீழ்ச்சியை இன்று சனிக்கிழமை பார்வையிடச் சென்று பின்னர் அங்கு குளித்துக்கொண்டிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, இராஜகிரியவை வசிப்பிடமாக கொண்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.