உயிரிழந்த சகோதரனின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்த நபர்: காரணம் என்ன?

ஜேர்மனி நாட்டில் உயிரிழந்த சகோதரனின் சடலத்துடன் நபர் ஒருவர் பல நாட்களாக வசித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஜேர்மனியில் உள்ள Rostock என்ற நகரில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 49 மற்றும் 45 வயதான சகோதர்கள் இருவர் கடந்த 20 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இளையவர் மீது மூத்தவருக்கு அளவுக்கடந்த பாசம் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று ‘எனது தம்பி இறந்துவிட்டார். உதவிக்கு வாருங்கள்’ என மூத்த சகோதரர் பொலிசாருக்கு அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

தகவலை பெற்ற பொலிசார் சகோதரரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வீட்டில் உள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்தவாறு தம்பி உயிரிழந்து காணப்பட்டார்.

இக்காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொலிசார் உடனடியாக மருத்துவரை வரவழைத்து சடலத்தை ஆய்வு செய்துள்ளனர்.

அதில், ‘நபர் இயற்கையாகவே உயிரிழந்து விட்டதாகவும், ஆனால் இவர் உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதாக’ மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் பதிலால் அதிர்ச்சி அடைந்த பொலிசார் மூத்த சகோதரிடம் விசாரணை செய்துள்ளனர்.

அப்போது, ‘எனது தம்பியின் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் எனது தம்பியின் உடலை கட்டி பிடித்து அழுது எனது துக்கத்தை தீர்த்தேன்.

ஆனால், சமீப நாட்களாக சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதால் பொலிசாரை அழைத்ததாக’ அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் மூத்த சகோதரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.