ஒரே குத்தில் சமையல்காரரை கொன்ற மேலாளர்! அதிர வைக்கும் பின்னணி காரணம்

பிரித்தானியாவில் உள்ள ஒரு இந்திய உணவகத்தின் மேலாளர் அங்கு பணியாற்றிய சமையல்காரரை ஒரே குத்தில் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தின், Aberdeenshire பகுதியில் உள்ள இந்திய உணவகத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் மூன்று குழந்தைகளுக்கு தந்தையான 56 வயதான Shahzad Ali Shah உயிரிழந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் சம்பவத்தன்று 53 வயதான உணவக மேலாளர் Hidayet Ozden போனில் ஆர்டர் எடுத்துள்ளார். குறித்த ஆர்டரை சமையல்காரரிடம் கூறியுள்ளார்.

சமையல்காரர் தந்தூரி சிக்கன் போன்லெஸா என Shahzad Ali Shah மேலாளரிடம் கேட்க இருவருக்கும் வாக்குவாதம் எற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த Hidayet Ozden, Shahzad Ali Shahவை குத்த அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர், Hidayet Ozden, சமையல்காரரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். எனினும் அது பலனளிக்காமல் Shahzad Ali Shah உயிரிழந்துள்ளார்.

மேலாளரை கைது செய்த பொலிசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் நடந்த முதற்கட்ட விசாரணையில் Hidayet Ozden கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.