தலைநகாில் தினமும் காணாமல் போகும் பெண்கள்…! பதறவைக்கும் பகீா் உண்மை…!!

அனைத்து அதிகார மையங்களும் டெல்லியில்தான் இருக்குங்க ..! இங்குதான் பெண்கள் தினமும் கடத்தப்படுறாங்க..!. ஆண்களின் காமவெறியாட்டத்திற்கு பாப்பா முதல் பாட்டி வரை அதிகம் பலியாவதும் இங்கேதான் .

டெல்லியில் மக்கள் தொகை பெருக்கமும் அதிகமாக இருப்பதால் குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லாமலேயே இருக்கிறது.

அடிக்கடி பெண்கள் கடத்தி கற்பழிக்கப்படுவது, வெளிநாட்டு பெண்கள் செக்ஸ் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவது போன்ற கொடுமையான சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு நவம்பா் மாதம் வரை   5 ஆயிரத்து 920 பெண்கள் காணாமல் போனதாக வழக்கு பதிவாகி இருக்கிறது. பணத்திற்கும், விபச்சாரத்திற்கும்   நிறையபோ் கடத்தப்பட்டிருக்கிறார்கள். டெல்லியில் மட்டும் 20 ஆயிரத்து 882 பேர்  காணாமல் போயிருக்கிறார்கள்.

3 வயது முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளை கண்டு பிடிக்கும் வேலையை கிரைம் பிராஞ்  போலீஸ்  முறையாக செய்ய வேண்டும்என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது.

4 மாத்திற்குள் காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க வேண்டும். இல்லையென்றால்   அனைத்தையும் ஏ.எச்.டி.யு ( ஆன்டி ஹியூமன் டிராஃபிக்கிங் யூனிட்) இடம் கொடுத்து விடுவோம்  என்று  ராஜ்சபாவில் நேற்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் சுக்காராம் கூறியிருக்கிறார்.