மற்றவர்கள் பொறாமை படும் அளவுக்கு கூந்தல் வளர்ச்சி வேண்டுமா.?

கூந்தலை சரிவர கவனிக்காவிட்டால் முடி வளர்ச்சி ஒரு கட்டத்தில் முழுவதும் நின்று போய்விடும்.
என்ன செய்தாலும் அடர்த்தி மற்றும் நீளமாக வளராது. இதன் அறிகுறிதான் முடி உதிர்தல்.
முடி உதிர்வது இயற்கை என்றாலும் கொத்து கொத்தாய் உதிர்ந்தால், நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

செம்பருத்தி

நல்லெண்ணெய்

1. செம்பருத்தியை நன்றாக காயவைத்து கொள்ளுங்கள்

2. பின்பு இதனை பொடி செய்து கொள்ளுங்கள்.

3. பொடியை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி போங்கும் போது அடுப்பை அணைத்துவிடவும்.

4. இதனை கண்ணாடி பாட்டிலில் எடுத்து கொள்ளுங்கள்

5. சில நாட்களுக்கு இளம் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டவும்.

6. இந்த எண்ணெயையை தினமும் ஸ்கால்ப்பில் தேய்த்து வாருங்கள்.

7. தலைமுடி உதிர்தல் நின்று விடும்

8. மற்றவர்கள் பொறாமைபடும்படி மிளிரும் கூந்தல் கிடைக்கும்