ஜனாதிபதி ரஸ்யா மற்றும் ஈரானுக்கு விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வருடம் ரஸ்யா மற்றும் ஈரானுக்கு விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று(30) தெரிவித்துள்ளார்.

ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி ரஸ்யாவுக்கு மார்ச் மாதம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதி ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்றும், அடுத்த வாரம் மலேசியாவுக்கு பயணிக்கவுள்ளார் என்றும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

மேலும், இந்த விஜயங்களின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.