கண்ணீருடன் திரும்பும் மாவீரர்களின் உறவுகள்!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்கள் இராணுவத்தினருடைய கட்டுப்பாட்டு பகுதியாக இல்லாதிருப்பதால் அங்கு துப்பரவு பணிகள் இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்புரவு பணியானது நேற்று முன்தினம்(25) அப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யுத்தகாலத்தில் கிளிநொச்சியில் வசித்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக்கொண்ட மாவீரர்கள் பலரும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் துப்பரவுப் பணிகளின்போது கல்லறைகள் தெரியும் படி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பல ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

இவ்வாறு வெளியிடப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில் தமது உறவுகளின் கல்லறைகளும் இருக்குமா? என்ற எண்ணத்தில் நேற்று முதல் பலரும் அங்கு சென்று பார்த்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு இடங்களிலும் பல ஆயிரம் பேரின் கல்லறைகள் மற்றும் நடுகற்கள் இருந்தபோதும் தற்போது ஒரு சில மட்டுமே அங்கே எஞ்சியுள்ளதைக் கண்டு உறவுகளின் கல்லறைகளை தேடி வந்த உறவுகள் கண்ணீருடன் வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது.