லசந்த கொலையாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல்! குழப்பத்தில் பொலிஸார்

பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பான தடயங்கள் கிடைக்காமையினால் கொலையாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, சண்டே லீடர் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரின் புகைப்படம் போன்ற மாதிரி ஓவியப்படம் ஒன்றை பொலிஸார் இன்றைய தினம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர், 35 வயதுடையவர் என்றும், தடிப்பமான 5.8′ உயரமான மனிதர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்வையிட்ட சாட்சியங்கள் தெரிவித்த விளக்கங்களின் அடிப்படையில் குறித்த மாதிரி ஓவியப்படம் ஒரு கலைஞரால் வரையப்பட்டுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மாதிரி சித்திரத்தின் அடிப்படையில், சந்தேகநபர் பற்றிய தகவல் தெரிந்தால் 071-8305528, 071-8349505, 077-3291500, 071-8070207 அல்லது 011-2422176, 011-2380380 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு தெரிவிக்கவும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும்,பொது மக்களின் உதவியை மீண்டும் மூன்றாவது முறையாக எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி தெஹிவளை பகுதியில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.