வரலாற்று சாதனையில் ரணில்! ஆச்சரியத்தில் அமைச்சர்கள்

கடந்த வியாழக்கிழமை அலரி மாளிகைக்கு சென்றிருந்து பிரதமர், அமைச்சர்களுடன் கலந்துரையாடலும் மேற்கொண்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் வாக்கெடுப்பில் 162 வாக்குகள் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அனைவரும் பிரதமரை பாராட்டியுள்ளனர்.

இலங்கையின் வரலாற்றில் வரவு செலவுத்திட்டத்திற்கு இவ்வளவு அதிகமாக வாக்குகள் எப்போதும் கிடைக்கவில்லை என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்தின் ஆட்சியை பிடிக்கும் முயற்சியிலேயே கூட்டு எதிர்க்கட்சி செயற்பட்டுள்ளதென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்போது தினேஷ் குணவர்தன கூறிய இராணுவ புரட்சி குறித்து விசாரணை நடத்துமாறு இராணுவத்தினர் தன்னிடம் கோருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அண்மையில் ஊடக பிரதானிகளை சந்தித்திருந்தார். இதன்போது அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக பரப்புமாறு மஹிந்த கோரியுள்ளார்.

மஹிந்தவுடனான சந்திப்பின் போது கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலர் என்னிடம் தகவல் வழங்கியிருந்தார் என பிரதமர் இரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.