இலங்கையின் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் மாற்றம் இல்லை!- ஐ.நா.சபை

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை என்ற விடயத்தில் தமது கொள்கையில்மாற்றம் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் பிரதிப்பேச்சாளர் பர்ஹான் ஹக்இந்தக் கருத்தை உள்ளுர் ஆங்கில இதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் விடயங்களில் தமக்கு அழுத்தங்கள் இல்லை என்று இலங்கை அரசாங்கம்அண்மையில் தெரிவித்திருந்த நிலையிலேயே பர்ஹான் ஹக்கின் மேற்படி கருத்து வெளியாகியுள்ளது.

பான் கீ மூன் அடுத்த வருடம் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இலங்கையின்விடயத்தில் கொள்கை மாற்றம் ஏற்படும் என்று சில தரப்புக்கள் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன.

எனினும் அதனை பர்ஹான் ஹக் மறுத்துள்ளார்.யார் வந்தாலும் இலங்கையின் விடயத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

சித்திரவதைகள், வெள்ளை வான் கடத்தல் போன்ற சம்பவங்கள் கடந்த வருடத்திலும் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே இலங்கை அரசாங்கம் அந்த விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கோரியுள்ளார்.