ஐயப்ப சுவாமியின் இரு கால்களையும் கட்டப்பட்டிருப்பதன் காரணம் தெரியுமா?

ஐயப்பன் ஸ்வாமியின் பாதங்களுக்கு சற்று மேலே இரு கால்களையும் சேர்ந்து கட்டப்பட்டு இருக்கும் வஸ்திரம் எதனால் என்று தெரியுமா…?

பதினெட்டாம் படிமேல் தவக்கோலத்தில்  அமர்ந்து அருளாட்சி புரியும் ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப் பட்டு இருப்பதைக் காணலாம்.
அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

ஸ்வாமி ஐயப்பனைக் காண  பந்தள மகாரஜா அரசனான ராஜசேகரன் ஒரு மூறை சபரிமலைக்கு வந்த போது  ஸ்வாமி ஐயப்பன் தனது தந்தை  (வளர்ப்பு தந்தை)
என்ற காரணத்தால் எழ முயன்ற போது  இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக  பந்தள மகாராஜா தன் தோளில்
போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை  ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்டபோது  அந்த அங்கவஸ்திரம் ஐயப்பனின்  காலைச் சுற்றிக் கொண்டதாகவும்  கூறப்படுகிறது.

உற்று நோக்கினால் ஐயப்பன்  தனது தந்தையை கண்டு அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே  எழுந்திருப்பது போல்  தோற்றம் பெற்றதை காணமுடியும்.

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா