உலகின் பருவ நிலை மாற்றத்தால் நீரில் மூழ்கப்போகும் 48 நாடுகள்! – அதிர்ச்சி தகவல்!!

உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் பூமி அதிக அளவு வெப்பமாகி வருகிறது, இதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றன. அவை தண்ணீராக மாறி கடல் நீரில் கல்க்கின்றன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதே நிலை நீடிக்குமானால், பூகோள ரீதியாக பல்வேறு நாடுகள் அழியும் நிலை ஏற்படும். இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இதை சாமளிப்பதற்காக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதில் ஒரு பகுதியாக தற்போது ஐநாவில் நடைபெற்று வரும் பருவ நிலை மாற்ற மாநாட்டின் போது பூமியின் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவர சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை, சுமார் 1.5 டிகிரி செல்சியல்ஸ் அளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று குறித்த நாடுகள் அனைத்தும் தீர்மானித்துள்ளன என கூறப்படுகிறது. இதனால் 2050 ஆம் ஆண்டிற்குள் புதுபிக்கத்தக்க எரிசக்தியை 100 சதவீதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

48 நாடுகள் கூட்டமைப்பில், ஆப்கானிஸ்தான் ,ஹைதி, பிலிப்பைன்ஸ்,வங்காள தேசம்ஹோண்டுராஸ்,ரிவாண்டா,பர்படோஸ்,கென்யா,செயிண்ட் லூசியா, பூடான்,செனகல்,புர்கினா பெசோ,மடகாஸ்கர்,தெற்கு சூடான்,,கம்போடியா,மாலவி, இலங்கை,கம்மோரோஸ்,மாலத்தீவுகள், சூடான், கோஸ்டோ ரிகா, , மார்ஷல் தீவுகள், தான்சானியா, காங்கீ மங்கோலியா குடியரசு டிமோர் லெஸ்டி, டொமினிக்கன் குடியரசு, மொராகோ, துனிசியா, எதோப்பியா, நேபாளம்,துவலு பிஜி, நைஜர், ஹன்வடு, கானா, பலவு, வியாட்னாம்கிரினடா,பப்புவாநியூகினியா, ஏமன், Guatemala உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.