சற்று முன் பெருங்கடலில் 7.0 ரிக்டர் நிலநடுக்கம்!! சுனாமி ஏற்படும் அபாயம்..!! எச்சரிக்கை வெளியானது??

பசிஃபிக் பெருங்கடலில் நேற்று நள்ளிரவு 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மத்திய அமெரிக்க பகுதியில் உள்ள நிகாராகுவா, எல் சால்வடார் ஆகிய நாடுகளில் கட்டடங்கள் அதிர்ந்தன.

முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

நிகாராகுவாவில் இந்த நிலநடுக்கத்துக்கு ஒரு மணிநேரம் முன்புதான் சக்திவாய்ந்த Otto சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றது. இதனால், அந்நாட்டின் அதிபர் டேனியல் ஒர்டேகா தேசிய அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார்.