அழகிரியை மட்டுமாவது சேர்த்துக்கோ…!! கலைஞரின் கடைசிக் கதறல்..! தளபதி..??

உடல் நலம் பாதிக்கப்பட்டு ரகசியமாக சிகிச்சை பெற்று வருகிறார் கலைஞர். முற்றிலும் தனிமைப் படுத்தப் பட்டதாக சில வார இதழ்கள் கூறுகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த ஒரு புலனாய்வு வார இதழும் அப்படியே எழுதி இருந்தது. கலைஞரின் அக்காவிற்கு வந்த அதே மரபு ரீதியான பிரச்சனையே கலைஞருக்கும் வந்துள்ளது என்றது அந்த பத்திரிகை.

அதே நேரம் அவரை சந்திக்க முக்கிய தலைவர்கள் கூட வருவதில்லை. துரைமுருகனும் உடல்நலமின்றி இருக்கிறார்.

ஆ.ராசா தளபதியைப் பார்ப்பதோடு சரி. ஆற்காட்டார் என்றோ அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். பேராசிரியர் அன்பழகன் முதுமை காரணமாக வெளியே வருவதில்லை.

இப்படியான நிலையில் கலைஞரை மதுரை மகன் அழகிரி தொடர்ந்து பார்த்து நலம் விசாரித்து வருகிறார். கட்சியில் இணைத்துக் கொள்ள கோரிக்கை வைத்து வருகிறார்.

கலைஞர் அழகிரியை சேர்த்துக் கொள்ள மனதளவில் என்றோ தயாராகிவிட்ட போதிலும், தளபதி இன்னும் மனம் இரங்கவில்லை என்கிறார்கள்.

அழகிரி கட்சியில் இணையும் பட்சத்தில் அது கட்சிக்கு பெரும் அரணாக அமையும்.  பாதுகாப்பாகவும் இருக்கும் என்பது கலைஞர் நம்பிக்கை.

இந்த விஷயமாக தளபதியிடம் கோரிக்கை வைத்து போராடிய கலைஞர் “இது எனது கடைசி விருப்பம் என்று கண்கலங்கினார் என்கிறார்கள்.

ஆனால் பொதுக்குழுவைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி பின்னர் முடிவு செய்யலாம் என்பது தளபதியின் எண்ணம்.

ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் எண்பது சதவீதம் பேர் தளபதியின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள்.

எனவே, கலைஞர் குழம்பிப் போய் அழகிரியை எப்படி கொண்டு வருவது என்று திணறுகிறார்..!

ஆனால், கலைஞரின் கடைசிக் கோரிக்கை என்பதால் தளபதி யோசிக்கலாம் என்பது தொண்டர்களின் விருப்பம் …!

பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று..!