இலங்கையின் வான்பரப்பில் தோன்றும் உலகின் அதிசயம்!

இலங்கை வான்பரப்பினை விண்வெளி மையம் கடந்து செல்லும் நிகழ்வை இன்று அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.40 மணியளவில் இலங்கையின் வான் பரப்பில் விண்வெளி மையம் கடந்து செல்லும் என நாசா அறிவித்துள்ளது.

இதனை வெற்றுக் கண்களால் பார்வையிட இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

எனினும் சீரற்ற காலநிலையால் மழையோ அல்லது முகில் கூட்டங்களோ அதிகமாக இருந்தால் பார்வையிடுவதில் சிக்கல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் நடக்கும் அனைத்து விதமான விடயங்களும் விண்வெளி ஆய்வு மையத்தின் ஊடாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பூமியிலுள்ள பல சுவாரஸ்சிய தகவல்கள் இதன்மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.sl-mumbai-map