நீங்கள் குளிர்பான பிரியரா? அப்போ ஆபத்து உங்களுக்கு தான்!

அதிகளவான சோடா மற்றும் பிற இனிப்பு குடி பானங்களை எடுத்துக்கொள்வோரில் புற்றுநோய்கள் தோன்ற வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வகை பானங்கள் ஈரலைச் சுற்றியுள்ள பித்தப்பை மற்றும் பித்த நாளங்களில் புற்றுநோயை தோற்றுவிக்கின்றது.

அதாவது நீரிழிவு நோய்க்கு தனித்தன்மையான உடல் எடை அதிகரிப்பு, அதிகரித்த குருதி வெல்ல மட்டம் போன்றன புற்றுநோய்க்கு காரணமாகின்றது.

சோடா மற்றும் பிற இனிப்பு பானங்கள் குருதி வெல்லத்தை அதிகரிப்பதோடு, உடல் நிறையையும் அதிகரிக்கிறது.

இவ் ஆய்வுக்கென 7 000 பேர்கள், 13 வருட காலமாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தனர். இக் காலப்பகுதியில் வெறும் 150 பேர்களில் பித்தப்பை, பித்தநாள புற்றுநோய்கள் அவதானிக்கப்பட்டிருந்தன.

ஆனால், இனிப்புத் தன்மையான குடிபானங்களை அருந்தாதவர்களுடன் ஒப்பிடுகையில், இவர்கள் இருமடங்கு பித்தப்பை புற்றுநோய்க்கு ஆளாகும் வாய்ப்பும், 79 வீதம் அதிகளவில் பித்தநாள புற்றுநோய்களுக்குள்ளாகும் வாய்ப்பும் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள்.

இது தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.