ஐரோப்பாவில் காஜல்!

காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் காஜல் அகர்வால். சில ஆண்டுகளுக்கு முன், ‘இளம் ஹீரோக்களுடன் மட்டும் தான் ஜோடி போடுவேன்’ என, கூறிவந்த அவர், இப்போது, தனக்கு வயதாகி விட்டதை மனதில் வைத்து, தன் கொள்கையை தளர்த்தியுள்ளார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, மறு பிரவேசம் செய்யும், கைதி நம்பர் 150 திரைப்படத்தில் மேடம் தான் ஹீரோயின். தற்போது, சிரஞ்சீவி மற்றும் படக்குழுவினருடன், ஐரோப்பாவில் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் காஜல். அவரது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள கவலை வேண்டாம் படத்தில், வசனம் எல்லாம் எக்குத் தப்பாக இருக்கிறதே’ என, கேட்டால்,’வசனம், கதை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது; அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன்; அவ்வளவு தான்’ என்கிறாராம் காஜல்.