பூமியில் மட்டுமா மலைகள் உண்டு? மிக உயரமான மலையைக் கொண்ட கிரகம் எது தெரியுமா?

சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகவும் உயர்ந்த மலையைக் கொண்ட கோள் செவ்வாய்க்கிரகம் ஆகும்.

21,9 கிலோ மீற்றர் உயரத்தைக் கொண்ட இந்த மலையை “ஒலிம்பஸ் மலை” என கூறுவார்கள்.

3 இலட்சம் சதுரகிலோ மீற்றர் பரப்பளவை இந்த மலை கொண்டுள்ளது.

இது பூமியிலுள்ள இத்தாலி நாட்டின் பரப்பளவிற்கு சமனாகும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே இந்த ஒலிம்பஸ் மலை உயரமான மலையாகும்.

ஆனால் ஒட்டுமொத்த சூரியக்குடும்பத்திலேயே உயரமான மலை ஒன்று உள்ளது. என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

ஆம் சூரியக்குடும்பத்திலுள்ள “வெஸ்ட்ரா” என்ற சிறுகோளில் காணப்படும் “ரியா செல்வியா மலை” என்று அழைக்கப்படும் மலைதான் இந்த சூரியக்குடும்பத்திலேயே மிக உயரமான மலையாகும்.

இது செவ்வாய்க்கிரகத்தில் உள்ள ஒலிம்பஸ் மலையை விட 100மீற்றர் மாத்திரமே அதிகமாகும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.