யாழ் மண்ணின் சிறப்பு எது ?

யாழ்ப்பாணம் ஒரு சிறந்த விளைநிலம் என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தோட்டம் அமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், திராட்சை தோட்டம் அமையுங்கள்.

அது நல்ல பலனை கொடுக்கும். யாழ் குடாநாட்டில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது அதேபோல், வெங்காயம், கெரட், பீட், வாழைக்காய் என பல்வேறு காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

யாழ் விவசாயிகள் உணவு பயிருக்கு அடுத்ததாக பணப் பயிர் செய்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் திராட்சை பயிர் செய்கையும் பிரபலமானது என்பதுடன் யாழ் திராட்சைக்கு இலங்கை சந்தையில் நல்ல கிராக்கியும் நிலவுகிறது.

யாழ்ப்பாணத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் திராட்சை பயிர் செய்யப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திராட்சை பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திராட்சை பயிரிட செம்மண் உகந்ததாக கருதப்படுகிறது. புண்ணாலைக்கட்டுவன், உரும்பிராய், இளவாழை, அளவெட்டி, அச்சுவேலி, கரவெட்டி, நெல்லியடி, உடுவில், புத்தூர், கோப்பாய், கைதடி, சண்டிலிப்பாய் போன்ற பிரதேசங்களில் திராட்சை பயிரிடப்பட்டு வருகிறது.

ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் திராட்சை கொடிகளில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோ திராட்சை பழங்களை பெற முடியும் விவசாயிகள் கூறுகின்றனர். ஏ 9 வீதி மூடப்பட்டிருந்த காலத்தில் ஒரு கிலோ திராட்சை 70 முதல் 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததுடன் தற்போது ஒரு கிலோ திராட்சை 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் யாழ்ப்பாணத்தில் விளையும் திராட்சை இலங்கையில் ஏனைய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதால், விவசாயிகள் மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. இதனை தவிர திராட்சை பழங்களை கொண்டு பானங்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.